

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,577வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.