உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பேர் பலி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 448வது நாளாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 448வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் உள்ள குடியிருப்பை குறிவைத்து ரஷியா நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 3 குழந்தைகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், கர்ப்பிணி படுகாயமடைந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com