

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 1, 11.30 PM
செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு செல்லும் அணுசக்தி நிபுணர்கள்
செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி நிபுணர்கள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் ரஷிய படைகள் செர்னோபிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ரஷிய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறிவிட்டது என உக்ரைன் கூறியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி தொடர்பான நிபுணர்கள் அனுப்பப்பட உள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் மரியானோ கிராஸி தெரிவித்துள்ளார்.
அந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான இந்த ஆய்வுக்கு அவர் தலைமை வகிக்க உள்ளார்.
உக்ரைனில் இத்தகைய ஆய்வு நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1, 10.30 PM
ரஷிய எண்ணெய் கிடங்கில் தாக்குதலா? உக்ரைன் வெளியுறவு மந்திரி மந்திரி பதில்
ரஷிய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என, உக்ரைன் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷியாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நகரம் உக்ரைன் தலைநகர் கீயவின் வடக்கில் அருகாமையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, இந்த தாக்குதல் குறித்து தன்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார். ராணுவ தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1, 9.00 PM
உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டுவதாக சீனா, நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மோதலில் எந்த ஒரு பக்கமும் சாயவில்லை என்று தெரிவித்துள்ள சீனா, ரஷியாவுடனான உறவு வரம்புகள் அற்றது என்றும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 6.30 PM
ஏப்ரல் 1, 3.30 PM
ரஷிய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைனின் தாக்குதல் பேச்சுவார்த்தைக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்கும் என ரஷியா விமர்சனம் செய்துள்ளது.
ஏப்ரல் 1, 2.22 PM
ரஷியப்படைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளான யுக்ரேனின் மேரியோபோல் நகரத்தில் உள்ள மக்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவை ஆணையத்தின் மூன்று வாகனங்கள் அடங்கிய சிறிய குழு, மேரியோபோல் புறப்பட்டது.
அக்குழுவினருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தாமதமான நிலையில், தற்போது அது கிடைத்துள்ளதால் மேரியோபோலுக்கு வாகனங்கள் புறப்பட்டுள்ளன.
மேரியோபோலுக்கான இந்த பயணம் "மிகவும் முக்கியமானது" என செஞ்சிலுவை ஆணையம் விவரித்துள்ளது. ரஷியப்படைகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்நகரத்தில், இன்னும் மக்கள் சிக்கியுள்ளனர்.
ஏப்ரல்1, 1.55 PM
ரஷியாவின் பெர்ஹொரொட் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏப்ரல் 1, 10.35 AM
செர்னோபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏப்ரல் 01, 05.55 a.m
உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு ரஷியாவின் காஸ்பர்ஸ்கி மென்பொருள் குறித்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 01, 04.56 a.m
அமெரிக்க இராணுவ உதவி ஏற்கனவே உக்ரைனுக்கு வந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 01, 04.21 a.m
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தைக்கான தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
ஏப்ரல் 01, 03.47 a.m
ரஷிய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறி விட்டனர்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்
ஏப்ரல் 01, 03.14 a.m
மனிதாபிமான பாதை மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 01, 02.50 a.m
வரும் நாட்களில் ரஷியாவுக்கு எதிராக வர்த்தகத் துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்
ஏப்ரல் 01, 02.05 a.m
ரஷியப் படைகள் 148 குழந்தைகளை கொன்றதாகவும், 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 விமான நிலையங்களை அழித்துள்ளதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24 ஆம் தேதியன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷிய படைகள் குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது 148 குழந்தைகளைக் கொன்றது. மேலும் 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 உக்ரைனின் விமான நிலையங்களை அழித்துள்ளது என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 01, 01.13 a.m
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சாதனை லாபத்தை ஈட்டுகின்றன - ஜோ பைடன்
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அதிக பெட்ரோல் விலையை பெற்றுவரும்நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் சாதனை லாபம் ஈட்டுவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதை விட அதிக எண்ணெய் உற்பத்தி செய்ய அல்லது செயலற்ற கிணறுகளை மீண்டும் தொடங்க பணத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் நாட்டின் நலனுக்காக முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 01, 12.35 a.m
புதின் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ரஷிய அதிபர் புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்துவது போல் தெரிகிறது. அவர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அவர் சில உயர் ஆலோசகர்களை பணிநீக்கம் செய்துள்ளார் அல்லது வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்க ஜனாதிபரி ஜோ பைடன் கூறினார்.