பிரதமர் மோடியின் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ரஷிய அதிபர் பாராட்டு

பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ரஷிய அதிபர் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ரஷிய அதிபர் பாராட்டு
Published on

விளாடிவாஸ்டோக்,

உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் பிரதமர் மோடி, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி உள்ளார்.

விளாடிவாஸ்டோக் நகரில் நடந்த 8-வது கிழக்கு பிராந்திய பொருளாதார மன்ற அமர்வில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நம்மிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் முன்பு இல்லை என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது நம்மிடம் உள்ளன. இந்த விவகாரத்தில் நமது கூட்டாளிகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், உதாரணமாக இந்தியா.

அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றனர். மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் சொல்வது சரிதான் என்று புதின் கூறினார்.

இந்தியாவின் புதிய பொருளாதார வழித்தடத்தையும் அவர் பாராட்டினார். இது ரஷியாவுக்கு நன்மையே பயக்கும் என்று கூறிய அவர், பாதிப்பு எதையும் உருவாக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com