ரஷியாவின் அணு ஆயுத தடுப்புப்படைகள் தீவிர தயார் நிலையில் இருக்க வேண்டும் - அதிபர் புதின் அதிரடி உத்தரவு!

மேற்கத்திய நாடுகள் ரஷியாவை தாக்கும் அபாயம் உள்ளதால், ரஷியாவின் தடுப்புப்படைகள் தீவிர தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஷியாவின் அணு ஆயுத தடுப்புப்படைகள் தீவிர தயார் நிலையில் இருக்க வேண்டும் - அதிபர் புதின் அதிரடி உத்தரவு!
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷிய அணு ஆயுத தடுப்பு படையினர் தயாராக இருக்க அதிபர் புதின் ஆணையிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் ரஷியாவை தாக்கும் அபாயம் உள்ளதால், ரஷியாவின் தடுப்புப்படைகள் தீவிர தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, ரஷிய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடனான ஆலோசனையில் அதிபர் புதின் கூறியிருப்பதாவது;-

ரஷியாவின் தடுப்புப்படைகளை தீவிர தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று ரஷிய அணு ஆயுத தடுப்பு படைக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தக்கூடும் என்று குற்றம்சாட்டினார்.

அதிபர் புதினின் இந்த புதிய உத்தரவால் போர் இன்னும் தீவிரமாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com