

வாஷிங்டன்
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன்பு நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் வெளிவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மாகாணங்களையோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களையோ சாட்சியமளித்த அதிகாரிகள் குறிப்பிட மறுத்து விட்டனர். இச்சாட்சியம் மூலம் ரஷ்யத் தலையீடு இருந்தது எனும் குற்றச்சாட்டு ஏறக்குறைய உண்மையாகிவிட்டது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ய மின்னஞ்சல்களை வெளியிட்டது குறித்து ஏற்கனவே ரஷ்யர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தவறான பிரச்சாரத்தால் டிரம்ப் வென்றதாக அவருடைய முதல் ஐந்துமாத கால பதவியின் போது தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
ரஷ்யர்கள் சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் நுழைந்து பார்வையிட்டதாகவும் ஆனால் வாக்குகளை சாதகமாக மாற்றவில்லை எனவும் கூறப்படுகிறது.
அரிசோனாவும், இல்லினாய்ஸும் தங்களது கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடைந்ததை ஒப்புக்கொண்டன.
மிகக்குறைவான வாக்குகள் கூட தேர்தல் முடிவை மாற்றியமைக்கக்கூடும் என்பதால் இந்த சைபர் தாக்குதல் விஷயம் முக்கியத்துவம் பெறுவதாக ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.