

மாஸ்கோ
ரஷ்யாவில் உள்நாட்டு வங்கிகள் மீது பேரளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அத்தாக்குதல்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் மத்திய வங்கி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது உலகம் முழுவதும் 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க உளவு அமைப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஹேக்கிங் டூல்கள் மூலம் நடத்தப்பட்டதாக வந்த செய்திகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்களினால் பல்லாயிரம் கணினிகள் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய பொதுத்துறை நிறுவனமான ரஷ்ய புகைவண்டி போக்குவரத்து கழகமும் இதே போன்றதொரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வெற்றிகரமாக அதைத் தடுத்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.