ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது
Published on

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,25,03,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,59,546 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,13,936 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 174 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 11,017 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 7,752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுள்ளநிலையில், 4,89,068 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (32,50,704 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (17,68,970 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(8,21,493 பேர்) உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com