

மாஸ்கோ,
ரஷ்யா-உக்ரைன் இடையிலான பதற்றம் உலகளாவிய உணவு பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏனெனில் உலக தானியச் சந்தையில் இருதரப்பினரும் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் ஏற்கனவே உலகளாவிய சந்தையில் வர்த்தக நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அதிகரித்துள்ள போர் பதற்றத்தை தணிக்க அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தேவை என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது உலகளாவிய வர்த்தக சந்தையில் ஏற்றுமதியாளர்களிடையே தானிய ஏற்றுமதிக்கான திட்டமிடல் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தவிர சோளம், சோயா பீன்ஸ், கோதுமையின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.