வடகொரியா சென்றார் தென்கொரிய அதிபர் : 3-வது முறையாக கிம்மை சந்திக்கிறார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் பியாங்யாங் சென்றடைந்தார்.
வடகொரியா சென்றார் தென்கொரிய அதிபர் : 3-வது முறையாக கிம்மை சந்திக்கிறார்
Published on

சியோல்,

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மூன்றவாவது முறையாக சந்திக்க, இன்று வடகொரியா சென்றார். உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு சியோலில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட மூன் ஜே இன், பியாங்க்யாங் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.50 மணிக்கு சென்றடைந்தார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் - க்கு வடகொரியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான வடகொரிய மக்கள் மூன் ஜே இன்னுக்கு ஆரவார வரவேற்பு அளித்தனர். வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், விமான நிலையத்திற்கு நேரில் சென்று, வரவேற்பு அளித்தார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தனது மனைவி மற்றும் 110 உயர்மட்ட குழுவினருடன் வடகொரியா சென்றுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு மூன்று நாட்களாக நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத பிரச்சினையில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இவர்களின் சந்திப்பு அமையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இவர்களின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com