அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய சவுதி இளவரசர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது.
அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய சவுதி இளவரசர் உயிரிழப்பு
Published on

லண்டன்,

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை, அவரது உறவினர்கள் குடும்பத்தினர் பலரும் இளவரசர் அந்தஸ்தில் உள்ளனர். அவர்களில் சிலர் சவுதி அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

அந்த வகையில், சவுதி இளவரசர்களில் ஒருவர் அப்துல் பின் அப்துல்சி பின் ஜலாவி அல் சவுத் (வயது 29).

மர்ம மரணம்

இவர் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஓட்டல் அறையில் இளவரசர் ஜலாவி அல் சவுத் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் எவ்வாறு உயிரிழந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காணத்தால் உயிரிழந்தாரா? என்பது குறித்து இங்கிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சவுதி இளவரசர் ஜலாவி அல் சவுத் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பிற்குமுன் அன்றைய தினம் இரவு ஜாலாவி அல் சவுத் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மரணம் தற்செயலானது என்றும் சதிச்செயலோ, கொலையோ இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com