

லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அவரது சொந்த கட்சிக்குள் (தொழிலாளர் கட்சி) எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக வேண்டும் என்று 100-க்கும் எம். பிக்கள் வலியுறுத்தினர். மேலும் சில மந்திரிகள் ராஜினாமா செய்ததால் ஸ்டார்மருக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலக ஸ்டார்மர் முடிவு செய்து உள்ளதாகவும், தனது முடிவை அவர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி - அரசியல் அழுத்தம், கட்சிக்குள் தனக்கான செல்வாக்கு குறைந்து வருவது உள்ளிட்டவை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் ஸ்டார்மருக்குப் போட்டியாகக் கருதப்படும் முன்னணித் தலைவரும், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயருமான ஆண்டி பானம், மேக்கர் பீல்டு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆகி உள்ளார்.
அவரை தொழிற்கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்து பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியில் பெரும்பாலானோர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.