ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அளவில் தீர்வு ஏற்படும் வகையிலான பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த தயார்:  பாகிஸ்தான் அறிவிப்பு
Published on

லாகூர்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.

Also Read
கர்நாடகா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் காருக்குள் எரித்து கொலை..? போலீசார் விசாரணை

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த தயார்:  பாகிஸ்தான் அறிவிப்பு

இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் நேற்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இதனை வரவேற்கும் வகையில் பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் இன்று பேசும்போது, ஈரானில் நீண்டகால மோதலால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மேற்காசிய பகுதியில் பதற்றம் அதிகரிக்காத வகையில், அனைத்து தரப்பினரும் உடனடியாக பகைமையை விட்டொழித்து, அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் என கூறும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது. அதன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று கூறும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அளவில் தீர்வு ஏற்படும் வகையில், அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கம் வாய்ந்த பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com