

மாட்ரிட்,
வீட்டுவசதி நெருக்கடி மற்றும் குடியேற்ற விவகாரங்களில் மக்களின் கொந்தளிப்புக்கு மத்தியில் ஸ்பெயினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
8 ஆண்டுகால சோசலிஸ்ட் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பிரதமர் பெட்ரோ சான்செசுக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ஆல்பர்டோ நுனெஸ் பீஜோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
350 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற இரு தரப்பும் தீவிரம் காட்டி வரும் நிலை யில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளது.