தேச துரோக வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பெஷாவர் சிறப்பு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
தேச துரோக வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை
Published on

பெஷாவர்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 76). இவர் 2007-ம் ஆண்டு அதிபராக இருந்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக முஷாரப் மீது, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. முஷாரப் மீது மார்ச் 31, 2014 அன்று குற்றம் சாட்டப்பட்டது, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் தாக்கல் செய்தது. இருப்பினும், மேல்முறையீட்டு மன்றங்களில் வழக்கு காரணமாக முன்னாள் இராணுவ சர்வாதிகாரி முஷாரப் வழக்கு நீடித்தது. அவர் மார்ச் 2016 இல் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.

முஷாரப் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை. தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பெஷாவர் ஐகோர்ட் தலைமை நீதிபதி வக்கார் அஹ்மத் சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட பெஞ்ச், பர்வேஸ் முஷாரஃபுக்கு தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com