ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த இடத்தில் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடு

தேவாலயத்திற்கு ஊர்வலமாக வந்த பாதிரியார்கள், உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த இடத்தில் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடு
Published on

ஜெருசலேம்,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இடத்தில் அமைந்துள்ள சர்ச் ஆஃப் செபுல்கர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அப்போது தேவாலயத்திற்கு ஊர்வலமாக வந்த பாதிரியார்கள், உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com