ஜோர்டான் மன்னருடன் பேச்சு; இந்திய சமூகத்தினரை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

அமைதி, பாதுகாப்பு மற்றும் ஜோர்டான் மக்களின் நலன் ஆகியவற்றுக்கான நம்முடைய ஆதரவையும் மீண்டும் உறுதிபடுத்தினோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
ஜோர்டான் மன்னருடன் பேச்சு; இந்திய சமூகத்தினரை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஜோர்டான் மன்னர் அப்துல்லா 2-விடம் தொலைபேசி வழியே இன்று பேசினார். அப்போது மேற்கு ஆசியாவில் காணப்படும் சூழ்நிலை பற்றி வருத்தங்களை தெரிவித்து கொண்டார்.

Also Read
போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கிறோம்: அமெரிக்கா
ஜோர்டான் மன்னருடன் பேச்சு; இந்திய சமூகத்தினரை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

இந்த கடினம் வாய்ந்த தருணத்தில், ஜோர்டானில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை பாதுகாப்பாக பார்த்து கொள்வதற்காக தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். இதேபோன்று அமைதி, பாதுகாப்பு மற்றும் ஜோர்டான் மக்களின் நலன் ஆகியவற்றுக்கான நம்முடைய ஆதரவையும் மீண்டும் உறுதிபடுத்தினோம் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் சவுதி அரேபியாவின் இளவரசர் மற்றும் பஹ்ரைன் அரசர் ஆகியோரை தொ வழியே தனித்தனியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவ்விரு நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்து கொண்டார்.

இந்த பதற்ற சூழலில், அந்த நாடுகளில் பெரிய அளவில் உள்ள நம்முடைய சமூகத்தினரின் பாதுகாப்பில் இந்தியா அளித்து வரும் முன்னுரிமையை வெளிப்படுத்தும் வகையில், இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பற்றியும் பிரதமர் மோடி கேட்டறிந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com