கொரோனா தொற்று பரவல்: இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து நாளை மறுநாள் முதல் ஓமனுக்கு வர தடை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஓமனுக்கு வருகை புரிய தடை விதிக்கப்படுகிறது என்று சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல்: இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து நாளை மறுநாள் முதல் ஓமனுக்கு வர தடை
Published on

மஸ்கட்,

ஓமனில் நேற்று சுப்ரீம் கமிட்டி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுப்ரீம் கமிட்டியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஓமனுக்கு வருகை புரிய தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகளின் வழியாக பயணம் மேற்கொள்பவர்கள் ஓமன் நாட்டிற்கு வருவதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்னதாக கோரிக்கை வைக்க வேண்டும். இந்த அறிவிப்பின்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த தடை உத்தரவானது அமலுக்கு வருகிறது. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரையில் தொடர்ந்து அமலில் இருக்கும்.

மேற்கூறப்பட்ட நாடுகளில் இருந்து வரும் ஓமன் குடியுரிமை பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தடையில்லாமல் ஓமன் நாட்டிற்கு வருகை புரியலாம்.

அதேபோல் ஓமன் நாட்டில் உள்ள வணிக வளாகங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்படுகிறது. அனைத்து கடைகள், உணவகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com