

கொழும்பு,
இலங்கை முழுவதும் இன்று திடீரென மின் தடை ஏற்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை. இந்நாட்டில் இன்று காலை திடீரென மின் தடை ஏற்பட்டது. காலை 11.30 மணி முதல் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. மத்திய மின் பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் விநியோகம், இண்டர்நெட், செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அதேவேளை, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதேவேளை, பெரும்பாலான பகுதிகளில் மின் தடை தொடர்ந்து நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.