

வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், டுவிட்டர் பக்கத்தில் தவறாக பதிவிடுவதில் பெயர் போனவர். அதனால், நெட்டிசன்களின் கிண்டலுக்கும் ஆளாவார்.
இந்நிலையில், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோருக்கு டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், இலங்கையில், தேவாலயங்களிலும், ஓட்டல்களிலும் நடந்த குண்டு வெடிப்புகளில் 138 மில்லியன் பேர் பலியானதற்கு அமெரிக்க மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
138 பேர் பலி என்று குறிப்பிட நினைத்தவர், 138 மில்லியன் என்று குறிப்பிட்டதால் வழக்கம்போல் பலரும் கிண்டல் செய்தனர். இலங்கையின் மக்கள்தொகையை விட நீங்கள் சொன்னது அதிகம். அப்படியானால் அந்த நாடே ஆளில்லாத நாடாகி விட்டதா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.