திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம்

திபெத்தில் நேற்றிரவும் 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி இருந்தது.
திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம்
Published on

நைபிடா,

மியான்மர் நாட்டில் இன்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 12-ந்தேதி அதிகாலை 1.45 மணியளவில் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி இருந்தது.

இதேபோன்று திபெத்தில் இன்று நண்பகல் 12.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. திபெத்தில் நேற்றிரவும் 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. இதனால், அந்நாடுகளில் உள்ள மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com