திருமண நிகழ்ச்சியில் தற்கொலைபடை தாக்குதல்; பாகிஸ்தானில் 7 பேர் பலி


திருமண நிகழ்ச்சியில் தற்கொலைபடை தாக்குதல்; பாகிஸ்தானில் 7 பேர் பலி
x

4 பேர், சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரி முகமது அட்னான் கூறியுள்ளார்.

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தின்போது, அமைதி குழு ஒன்றின் உறுப்பினர்கள் அந்த கட்டித்தில் இருந்துள்ளனர். இந்த தாக்குதலில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்தவர்களில் 4 பேர், சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரி முகமது அட்னான் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், சமீப ஆண்டுகளாக பல கொடூர தாக்குதல்களை நடத்திய தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானிய தலீபான் அமைப்பு இதனை நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

1 More update

Next Story