பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி

தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் 4 பேர் படுகாயமடைந்தனர்
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்:  2 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பகுதுவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தையும், பஞ்சாப் மாகாணம் பாக்கர் மாவட்டத்தையும் இணைக்கும் எல்லையில் போலீசார் சோதனைச்சாவடி உள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் நேற்று இரவு போலீசார் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சோதனைச்சாவடிக்கு நடந்து வந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தான்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 4 போலீசார் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்த போலீசாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதிதுல் முஜாகிதின் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com