சுவீடன் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை

7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும்.
பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை
Published on

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் அரசு தனது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு முற்றிலும் தடை விதிக்க அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னர் டிஜிட்டல் கல்வி முறையில் உலகளவில் முன்னணியில் இருந்த சுவீடன், தற்போது மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தடை

இத்தடை நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது. 7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும்.

ஐரோப்பாவின் பிற நாடுகளான பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளைத் தொடர்ந்து தற்போது சுவீடனும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com