சிரியா விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

இஸ்ரேல் விமானப்படைக்கு சொந்தமான எப்-15 ரக விமானங்கள் தங்கள் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டி-4 விமானப்படை மீது தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளன.
சிரியா விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
Published on

டமாஸ்கஸ்

சிரியாவில் உள்ள ராணுவ விமானதளம் ஒன்றில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹோம்ஸ் நகரம் அருகில் உள்ள தய்பூர் விமான தளத்தில் திங்கட்கிழமை அதிகாலை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு யார் பொறுப்பு என்று இன்னும் தெரிய வரவில்லை. சிரியாவின் ராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. பல ஏவுகணைகள் தய்பூர் விமான நிலையத்தை நோக்கி வீசப்பட்டு உள்ளன. எங்கள் விமான பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை தாக்குதலை தடுத்துள்ளன. "இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்" துல்லியமான கணக்கு தெரியவில்லை என கூறி உள்ளன.

"தற்போது, அமெரிக்க பாதுகாப்புத்துறை எந்த விதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை" என பென்டகன் தெரிவித்துள்ளது. எனினும், சிரியாவில் நடைபெறுவதை கூர்ந்து கவனித்து வருவதாகவும் பென்டகன் கூறியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் விமானப்படைக்கு சொந்தமான எப்-15 ரக விமானங்கள் தங்கள் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டி-4 விமானப்படை மீது தாக்குதல் நடத்தியதாக சிரியா மற்றும் குற்றம் சாட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com