மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் பயங்கரவாதி பாக். சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் பயங்கரவாதி பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பியுள்ளான்.
மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் பயங்கரவாதி பாக். சிறையில் இருந்து தப்பி ஓட்டம்
Published on

இஸ்லமாபாத்,

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பியுள்ளான். பெஷாவரில் -2014 ஆம் ஆண்டு ராணுவ பள்ளியில் நடத்திய தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவத்திலும் தொடர்புடைய பயங்கரவாதியான அவன், சிறையில் இருந்து தப்பிய பின்னர் ஒலி நாடா ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.

பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த ஒலிநாடாவில், பாகிஸ்தான் சிறையில் இருந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதியே தப்பி விட்டதாகவும் 2017 ஆம் ஆண்டு தன்னை சரண் அடையுமாறு கூறிய போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளான். எனினும் தற்போது உள்ள இருப்பிடம் பற்றிய எந்த தகவலையும் இஷான் வெளியிடவில்லை

மலாலா யூசுப்சாய்

பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி மலாலா, லண்டனில் உயர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்றார். பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய்க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 17 வயதில் மலாலா இந்த விருதை பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com