இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் காலமானார்

சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் காலமானார்
Published on: 

கொழும்பு,

இலங்கையை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் காலமானார்.

சிவாஜிலிங்கம்

இலங்கை தமிழர் சிவாஜிலிங்கம் (வயது 69). இவர் இலங்கை நாடாளுமன்ற எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை அரசியலில் தமிழ் உணர்வாளராகவும், தீவிர செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தவர் சிவாஜிலிங்கம். 2013ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்ற சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

காலமானார்

இந்நிலையில், கிட்னி தொடர்பான உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிவாஜிலிங்கம் நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவால் வல்வெட்டித்துறையில் உள்ள அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு இலங்கை அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X