ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது

சிறுமிகளின் ஆபாச படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது
Published on

டோக்கியோ,

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் மற்ற சமூகவலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகோயா மற்றும் யோகாகாமா பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் ஆசிரியர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்தது போல அமைந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com