62 நாட்கள் கோமா நிலையில் இருந்தவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு உணவு

62 நாட்கள் கோமா நிலையில் இருந்த வாலிபரை நினைவு திரும்ப வைத்த அவருக்கு பிடித்தமான சிக்கன் துண்டு உணவு
62 நாட்கள் கோமா நிலையில் இருந்தவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு உணவு
Published on

தைபே

உங்கள் வாழ்நாளில் உங்களுக்கு விருப்பமான உணவு இருக்கும். அந்த உணவு பெயரோ, அதன் வாசனையோ ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அல்லது மயக்க நிலையில் இருந்து கூட உங்களை எழுப்ப முடியும்.

உணவு என்பது மக்களின் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது ஒரு உண்மை. ஆனால் இப்போது, தைவானில் ஒரு வினோதமான சம்பவம் நடைபெற்று உள்ளது. ஒரு நல்ல உணவு பெரிய அதிசயங்களைச் செய்யக்கூடியதாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

62 நாட்கள் கோமா நிலையில் இருந்த ஒரு 18 வயது வாலிபர் தனது சகோதரர் அவருக்கு பிடித்த உணவு - சிக்கன் ஃபில்லெட்டுகள் பற்றி கூறியதும் அதிசயமாக எழுந்து உள்ளார்.

வடமேற்கு தைவானைச் சேர்ந்த வாலிபர் சியு என்பவர் மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கினார். அவரது உள் உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சியு ஹ்சிஞ்சு கவுண்டியில் உள்ள டன் யென் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.

மருத்துவமனை ஐ.சி.யுவின் இயக்குனர் ஹ்சீ சுங்-ஹ்சின், சியுவுக்கு மண்ணீரல், வலது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன; வயிற்று எலும்பு முறிவுகளிலிருந்து இரத்தப்போக்கு உள்ளது என கூறினார்.

சியுக்கு டாக்டர்கள் ஆறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர் - ஒரு கிரானியோட்டமி; லாபரோடமி; வலது சிறுநீரக நெஃப்ரெக்டோமி; சஸ்பில்னெக்டமி; கல்லீரல் அறுவை சிகிச்சை என அறுவைசிகிச்சைகள் மேற்கொண்ட பிறகும் அவர் கோமா நிலையில் இருந்தார்.

அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அவரது பக்கத்திலேயே இருந்து பிரார்த்தனை செய்து

சியுவின் மூத்த சகோதரர் மருத்துவமனைக்குச் சென்று நகைச்சுவையாக, "புரோ நான் உங்களுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்" அடிக்கடி கூறி வந்தார். இதனால் அவரது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. (சிக்கன் பில்லட் என்பது எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் உணவு ஆகும்)

சியுவுக்கு பிடித்த உணவைப் பற்றி கூறியதும் அவருக்கு சுயநினைவு வரத் தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பிடித்த உணவை ஞாபகபடுத்த அந்த வாலிபர் முழு குணமடைந்து, இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

சமீபத்தில், மருத்துவமனை வந்த சியு மருத்துவமனை ஊழியர்களுக்கு கேக் வழங்கி அவர்களின் கவனிப்பு மற்றும் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com