பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பலி

பாகிஸ்தானில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பலி
Published on

பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள வான்டா புத் பகுதியில், போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட டெக்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஹீம் மும்தாஜ்கான் மர்வத் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேற்சொன்ன சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com