ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது

ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடன் 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அதனால் அங்கு எப்போதும் கண்காணிப்பு பணி தீவிரமாக இருக்கும்.

இந்நிலையில், காந்தகாரில், நின்று கொண்டிருந்த ஒரு சிறிய காருக்குள், தன் உடலில் வெடிபொருட்களை சுற்றி இருந்த ஒருவரும், அவருடைய வழிகாட்டியும் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு உடை அணிந்தவர் மனித வெடிகுண்டு என்று தெரிய வந்தது. அவர் வெடிகுண்டை இயக்கி வெடிக்கச் செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com