விமானத்தில் மதுபோதையில் இளம்பெண் தகராறு - அவசரமாக தரையிறக்கப்பட்டது

விமானம் நடுவானில் பறந்தபோது மதுபோதையில் இருந்த இளம்பெண் தகராறு செய்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் மதுபோதையில் இளம்பெண் தகராறு - அவசரமாக தரையிறக்கப்பட்டது
Published on

மாட்ரிட்,

இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பூயர்டென்தூரா நகரத்துக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

அந்த இளம்பெண்ணுடன் வந்திருந்த நண்பரும், விமான ஊழியர்களும் அவரை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் இளம்பெண் தொடர்ந்து ரகளை செய்தார்.

இதையடுத்து விமானம் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த கேனரி தீவு போலீசார் விமானத்தில் ஏறி, மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போது பயணிகள் அனைவரும், கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இளம்பெண் இறக்கிவிடப்பட்ட பின்னர், விமானம் பூயர்டென்தூரா நகரத்துக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com