மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் படையினரின் கிளர்ச்சி, பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

மாஸ்கோ,

ரஷியா - உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து 'வாக்னர்' எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இது ரஷியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறது.

சமீபகாலமாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகேஸ் தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

இதற்கிடையே வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் கோபமடைந்த ரஷியா, கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகேஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது. ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்கோவில் ஜூலை 1 ஆம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com