

கான்பெரா,
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்தார். இது தொடர்பாக, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, இன்று (28.10.2026), ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள International Convention Centre-ல் நடைபெற்று வரும் சர்வதேச சுரங்கம் மற்றும் வளங்கள் மாநாடு மற்றும் கண்காட்சி (IMARC 2026)-ன் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்றேன்.
இம்மாநாட்டின் வாயிலாக, உலகளாவிய சுரங்க தொழில்துறையின் வளர்ச்சி போக்குகள், கனிம வளங்களை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்டறிதல் மற்றும் பயன்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட கனிமப் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையில், இயற்கை வளங்களை பாதுகாத்து, நவீன தொழில்நுட்பங்களுடன் பொறுப்பான கனிம வள மேலாண்மையை மேம்படுத்தி, தமிழ்நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதில் இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.