பாகிஸ்தானில் கொரோனோ தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,501 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனோ தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 3,501 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனோ தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,501 ஆக உயர்வு
Published on

இஸ்லாமாபாத்,

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,76,617 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 3,501 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 67,892 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

அங்கு அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 67,353 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 65,739 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 10,71,642 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 13-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com