

இஸ்லாமாபாத்,
உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா தொற்று, பாகிஸ்தானிலும் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது.
கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 4,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 98,943 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளநிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,002 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 33 ஆயிரத்து 466 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனாவால் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 37,090 பேரும், சிந்து மாகாணத்தில் 36,364 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.