பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் சாவு

பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் சாவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்துக்கு உட்பட்ட புனேர் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நேற்று சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது அமுக்கியது.

இதில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சுமார் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகி உள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாறை சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com