"உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்" - அண்டோனியோ குட்டாரெஸ்

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
"உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்" - அண்டோனியோ குட்டாரெஸ்
Published on

ஜெனீவா,

உக்ரைன் மீது ரஷியா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் வலியுறுத்தியும் அதில் பலனில்லை.

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com