ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பஸ் - 3 பேர் பலி

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன்.
ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பஸ் - 3 பேர் பலி
Published on

ஸ்டாக்ஹோம்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன். இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், அந்த பஸ் அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா? பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com