

வாஷிங்டன்,
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை நேற்று வெளியானது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய வர்த்தக அம்சங்கள் குறித்தும், அதனால் அமெரிக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும், நேற்று இந்திய வரைபடத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா வரிக் குறைப்பு செய்ய உள்ள பொருட்கள் தொடர்பான பட்டியலுடன், நம் நாட்டின் வரைபடமும் அதில் இடம் பெற்றிருந்தது.
அதில், முதல் முறையாக முழுமையான காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அரசுத்துறைகள் வெளியிட்ட வரைபடங்கள் இருந்து வந்தன. அவற்றுக்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்தாலும், தனது நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருந்து வந்தது. தற்போது தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பே என குறிப்பிடப்பட்டுள்ளது.