பஸ் மீது ரெயில் மோதி விபத்து - 5 பேர் பலி

பஸ் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பஸ் மீது ரெயில் மோதி விபத்து - 5 பேர் பலி
Published on

பிராஸ்லவா,

ஐரோப்பிய நாடான செக் குடியரசு தலைநகர் பிராகாவில் இருந்து சுலோவாக்கியா நாட்டின் வழியாக ஹங்கேரி தலைநகர் புடாபெட்ஸ் நகருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிராகா நகரில் இருந்து புடாபெட்ஸ் நகருக்கு நேற்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. சுலோவாக்கியாவின் நோவி சம்கி நகரில் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் பஸ் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது அதிவேகமாக வந்த ரெயில் பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com