

லண்டன்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு வடக்கே பெட்போர்டுஷைர் நகருக்கு தெற்கே மத்திய லண்டன் நகர் பகுதியில் இருந்து மத்திய இங்கிலாந்து பகுதிகளுக்கு பயணிகளை கொண்டு செல்லும் வழியில் வழக்கம்போல் ரெயில்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது, 2 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் ஒரு ரெயிலின் ஓட்டுநர் பலியானார். 90 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். குண்டு வெடித்தது போன்று உணர்ந்தேன் என்று, அதனை பார்த்த, ரெயிலின் முன்புற பெட்டி ஒன்றில் அமர்ந்திருந்த பீட்டர் நாப் என்பவர் கூறியுள்ளார்.
ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு துறையினரும் மற்றும் போலீசாரும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்த பகுதியே புகை மற்றும் தூசு படிந்து போர்க்களம் போன்று காட்சியளித்தது. ரெயில் விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.