ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான வரி ரத்து: டிரம்ப் அறிவிப்பு

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளான இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
டிரம்ப்
டிரம்ப்
Published on: 

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு எதிராக, ரஷியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.

அமெரிக்க செனட் சபையில் முக்கிய பங்கு வகித்த மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரில், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் 2026’ என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் இந்தச் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்தச் சட்டத்தின்படி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளான இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது

இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 18-ந்தேதி முதல் அமலுக்கு வர இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய நலன் கருதி இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய பல்வேறு பொருளாதாரத் தடைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த உத்தரவால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை

X

Daily Thanthi
www.dailythanthi.com