அமெரிக்க ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக டிரம்ப் தாக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக டிரம்ப் தாக்கு
Published on

வாஷிங்டன்

டிரம்ப் மருமகன் குஷ்னர் ரஷ்யர்களுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தும்படியான வழிமுறையை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியானதன் தொடர்ச்சியாக அதிபர் இவ்வாறு டிவீட் செய்துள்ளார்.

டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யர்கள் செல்வாக்கு செலுத்தியதாக எழுந்தப் புகார் தொடர்பாக பல தரப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விசாரணைகள் தொடர்பான செய்திகளுக்கு பதிலளிக்க டிரம்ப் தரப்பு தனிப்பிரிவையே ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

முன்னாள் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநரான கிளாப்பர் இவ்விஷயத்தில் விசாரணைகள் தேவையென்று கருத்து கூறியுள்ளார். தான் பதவியிலிருந்து விலகிய போது அனைத்து அறிகுறிகளும் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணையை பொருத்தமானதாக மட்டுமின்றி அவசியமானதாகவும் செய்திருந்தன என்றார் கிளாப்பர்.

அதேபோல எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உளவுக் குழுவின் உறுப்பினரான ஆடம் ஷிஃப் மறைமுக பேச்சுக்குழு தாலிபான் போன்ற குழுக்களுடன் பேசுவதற்கான முறை. தேர்தல் பிரச்சாரத்தில் உங்களுடன் ஈடுபட்ட ஒருவர், அதுவும் ரஷ்யர்கள் செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படும் நிலையில் ரஷ்யர்களுடன் மறைமுகமாக பேச்சுக்குழு அமைக்கிறார் என்பது தீவிரமான குற்றச்சாட்டிற்குரியது என்று கூறியுள்ளார்.

ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கெல்லி நட்பு சக்தியாக இல்லாத ரஷ்யா போன்ற நாடுகளுடன் மறைமுக பேச்சுக்குழு அமைப்பது நல்ல விஷயம்தான் என்று ஆதரவாக பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com