சுனாமி எச்சரிக்கை - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

ரஷியா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின.
சுனாமி எச்சரிக்கை - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ரஷியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. ஹவாய், சாலமன் தீவு, ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் 3 மீட்டர் (உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்தநிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது.அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்.சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com