

தோஹா
இக்கோரிக்கைகளை கத்தாரின் இறையாண்மை மீது ஆக்கிரமிப்பு செய்கின்றன என்று துருக்கி கூறியுள்ளது.
துருக்கியின் அதிபர் எர்டோகன் அடுத்த வாரம் கத்தாருக்கு வருகைத்தரவுள்ளார். இதையொட்டி அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நூமான் குர்துல்முஸ் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சையும் எச்சரித்த அவர் போர் வந்தால் எப்படி முடியும் என்பது தெரியாது என்று குறிப்பிட்டார்.
இப்பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள கத்தார் தயாராகவுள்ளது என்பதையும் துருக்கி அமைச்சர் சுட்டிக்காட்டினார். பேச்சு வார்த்தைக்கு துருக்கியும் உதவத் தயார் என்றும் அவர் கூறினார்.
கத்தாரிலுள்ள துருக்கியின் ராணுவ முகாமை மூடும் எண்ணம் ஏதுமில்லை என்ற அவர் அது எந்த அரேபிய நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை என்றார்.
ஏற்கனவே இப்பிரச்சினையை தீர்க்க அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகள் முயன்று தோற்றுள்ளன. துருக்கி அதிபரும் தனது முயற்சியை மேற்கொள்ளவுள்ளார் என்றார் குர்துல்முஸ்.
துருக்கியும், கத்தாரும் இணைந்து இராணுவ ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளன. இதில் அமெரிக்காவும் கூட பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.