'தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' உலக அளவில் முடங்கிய டுவிட்டர்....! பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிப்பு...!

தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள் என்று குறிப்பிடுவதால் பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.
'தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' உலக அளவில் முடங்கிய டுவிட்டர்....! பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிப்பு...!
Published on

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் ஒரு பயனாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 400 டுவிட் செய்ய முடியும்.

இந்நிலையில், உலக அளவில் இன்று டுவிட்டர் முடங்கியுள்ளது. செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை உள்ளது.

செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் பிழை வந்துள்ளது. அதேவேளை கணினி மூலம் டுவிட் செய்தால், தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' என்று பிழை வந்துள்ளது. இதன் காரணமாக டுவிட்டர் பயனாளர்கள் டுவிட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய டுவிட்டர் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com