பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
Published on

இந்த நிலையில் அங்கு கடலோர நகரமான பாஸ்னியில் குடா பாக்ஸ் பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஐ.இ.டி. என்னும் வெடிக்கும் சாதனத்தைக் கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரியும், ஒரு சிப்பாயும் உயிரிழந்தனர். அவர்கள் கேப்டன் அபான் மசூத், சிப்பாய் பாபர் ஜமான் ஆவார்கள்.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்பு சேவை ஐ.எஸ்.பி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இத்தகைய கோழைத்தனமான செயல்களால் பலுசிஸ்தானில் ஏற்பட்டுள்ள அமைதியையும், வளத்தையும் குலைத்து விட முடியாது. இதுபோன்ற பயங்கரவாத சக்திகளை என்ன விலை கொடுத்தாவது வீழ்த்துவதற்கு பாதுகாப்பு படைகள் உறுதி கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com