

இஸ்லாமாபாத்,
கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். லாகூருக்கு அருகிலுள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் பணம், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதில் ஈடுபட்ட அபித் அலி, ஷப்கத் அலி து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆள் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் பயங்கரவாதம் தொடர் பான குற்றங்களில் ஈடுபட்டதாக பயங்கரவாதத் தடுப்பு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை, லாகூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது.