ஆயிரம் டிரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்.. தீ பிடித்து எரியும் ரஷிய எண்ணெய் ஆலைகள்

ரஷியாவின் ஓசோன் நிறுவனத்துக்கு சொந்தமான தளவாட மையம் மற்றும் தரவு மையம் ஆகியவையும் தாக்கப்பட்டன.
ஆயிரம் டிரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்.. தீ பிடித்து எரியும் ரஷிய எண்ணெய் ஆலைகள்
Published on: 

மாஸ்கோ,

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் படைகள் தங்களின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை மேற்கொண்டன.

டிரோன் தாக்குதல்

ரஷியா மீது நேற்று உக்ரைன் ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அதில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் ஏற்றுமதி முனையம் தாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முனையமும், அதன் அருகில் உள்ள ருச்சி எண்ணெய் கிடங்கும் தீப்பற்றி எரிந்தன.

தரவு மையம்

இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர். ரஷியாவின் ஓசோன் நிறுவனத்துக்குச் சொந்தமான தளவாட மையம் மற்றும் தரவு மையம் ஆகியவையும் தாக்கப்பட்டன. அதே சமயத்தில், உக்ரைன் ஏவிய 1,015 டிரோன்களை தாக்கி அழித்து விட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

ஜெலன்ஸ்கி

இதற்கிடையே, உக்ரைனின் ஜபோரிஷ்சியாவில் ரஷியா நடத்திய 2 தாக்குதல்களில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள், 18 கார்கள், ஒரு கல்வி நிறுவனம் ஆகியவை சேதம் அடைந்தன. ஒரு பெண் பலியானார். உக்ரைன் எண்ணெய் வளங்கள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com